இது மேற்கூறிய தனிமொழியும் தொடர்மொழியும் பொருள் விளக்குமாறு கூறுகின்றது. இ-ள்: தனிமொழி சங்கேத வலியால் தனித்து நின்றும் தொடர்மொழி அவாய்நிலையானும் தகுதியானும் அண்மையானும் தொகைநிலை வகையானும் தொகாநிலை வகையானும் தொடர்ந்து நின்றும் பொருளை விளக்குதலை செய்வது அவற்றிற்கு இலக்கணம் என்றவாறு. |