சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பெயரியல்-நூற்பா- 315

எ-டு: மரம்- உண்டான்- மற்று- நனி- எனவும், ஆவைக்கொணா-
வெளிதைக்கொலான் எனவும், நீரான்நனை எனவும், ஆற்றங்கரைக்கண் ஐந்து கனிகள்
உளவாகின்றன எனவும் முறையே காண்க. 3
 

விளக்கம்
 

தனிமொழி- பெயர் வினை இடை உரி என்ற தனிச் சொற்கள், சமய ஆற்றல் -
சங்கேதவலி ‘சமௌ சமய சங்கேதௌ’ என்பது அமரசிங்கம். சங்கேத ஆற்றலாவது
‘இச்சொல் இப்பொருள் உணர்த்துக’ என்னும் இறைவனுடைய நியமத்தால் உண்டாய
சக்தி. சங்கேதம்- நியமம், உடன்பாடு.

இனி, ஆற்றலைச் சொல் இயற்கையாக உடையது என்பது பிரயோகவிவேகநூலார்
கருத்து. அவர் ‘இனிஆற்றலைச் சொல் இயற்கையாக உள்ளது என்னாது ஈசுரசங்கேதம்
எனவும், சமய சங்கேதம் எனவும், நானார்த்த பதங்களையும் சமானார்த்த பதங்களையும்,
கட்டிய வழக்கு எனவும் சில வடநூலார் கூறுவர். அது பொருந்தாது; வடமொழியில்
வழங்கும் இருவகைப்பதமும் ஒருவரால் சொல்லப்படாமல் சுயம்புவாய் நிகழ்கின்ற
வேதபுருடன் கண்ணும் வழங்கலின், ஆற்றல் சொல்லியற்கையேயாம் என்க.

‘செய்யா மொழிக்கும் திருவள் ளுவருரைத்த
                    பொய்யா மொழிக்கும் பொருள் ஒன்றே- செய்யா
                    அதற்குரியர் அந்தணரே’
எனச்சங்கத்தாரும் வேதபுருடனைச் சுயம்பு என்பர்”
என்றுரைத்தார் (பி.வே.18-உரை)

இனி, மழவை மகாலிங்கஐயர் தாம் இயற்றிய பாலபாடத்தில், சொல் சமுதாய
ஆற்றலால் பொருள் விளக்குவது’ என்பர். சமுதாய ஆற்றலாவது இச்சொற்கு இப்