சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பெயரியல்-நூற்பா-30111

‘அல்லன படர்க்கை’ (இ.வி.188) என்பதனான் வினைப்பெயர் படர்க்கை
இடத்ததாம் என்பது போந்த பொருள் நீங்காது காத்தலும், வினையாலணையும்
பெயரும் படர்க்கை இடத்ததாகும் என்று எய்திய கருத்தை விலக்கி அது மூன்று
இடத்திற்கும் தனித்தனி வரும் என்று தெரிவித்தலும் இந்நூற்பாவின் கருத்தாகும்.

தொல்காப்பியனார் தொழிற்பெயர் என்று குறியிட்டு ஆண்டனரேயன்றி
வினையாலணையும் பெயர் என்ற குறியீட்டை வெளியிட்டார் அல்லர்.
வினையாலணையும் பெயரைத் ‘தொழில்நிலை ஒட்டும் ஒன்று’ தொல்.சொல். 70
என்றே விளக்கிப் போந்தார். ஆதலின் இவற்றிடை வேறுபாடு தெரிவிக்க வேண்டிய
இன்றியமையாமை பின்னுள்ளோருக்கு ஏற்பட்டது.

தொழிற்பெயராவது வினைப்பகுதியை அடிப்படையாகக் கொண்டு
புடைபெயர்ச்சியைஉணர்த்தியும் உணர்த்தாதும் முதனிலைத் தொழிற்பெயர்,
முதல்நிலைதிரிந்த தொழிற்பெயர், விகுதிபெற்ற தொழிற்பெயர் என்ற மூன்று
நிலையதாய்க் காலம் காட்டாதுவரும் படர்க்கைப் பெயராம்.

வினையாலணையும் பெயராவது வினைமுற்றின் படுத்தல் ஓசையால் உண்டாவது,வினைமுற்றுத்திரிந்து உண்டாவது என்ற இருநிலையதாய்த் திணைபால் எண்
இடங்களை வெளிப்படையானும் குறிப்பானும் உணர்த்தி தனித்தனியே மூன்று
இடங்களுக்கும் உரிமை பூண்டு காலங்காட்டிவரும் பெயராம்.

வந்தான், சென்றான் என்பன முற்றாயும் பெயராயும் இருக்கும். இவைஇடையே
அகரச்சாரியை பெற்று வந்தவன் சென்றவன் என்று வரின் பெயரேயாம் என்பது.

இனி, விருத்தியுரையுள் முனிவர் ‘யான் உணல்’ என்