இது தான்யான் என்பன முதலியபெயர் பன்னிரண்டும் பாற்கு உரியவாமாறு கூறுகின்றது. இ-ள்: தான்யான் நான்நீ என்னும் நால்வகைப் பெயரும் ஒருவன் ஒருத்தி ஒன்று என்பனவற்றிற்கு எல்லாம் பொதுவாகிய ஒருமைப்பாற்கு உரியனவாம். ஒழிந்த எண்வகைப் பெயரும் பல்லோருக்கும் பலவற்றிற்கும் பொதுவாகிய பன்மைப்பாற்கு உரியனவாம் என்றவாறு. வரலாறு: தான்வந்தான் வந்தாள் வந்தது எனவும், யான் வந்தேன் நான்வந்தேன்நீவந்தாய் எனவும், தாம் வந்தார் வந்தன எனவும், யாம்வந்தேம் நாம்வந்தேம் எனவும், எல்லாம் வந்தேம் வந்தீர் வந்தார் வந்தன எனவும், எல்லீரும் வந்தீர் நீயிர்வந்தீர் நீர்வந்தீர் நீவிர்வந்தீர் எனவும் வரும். மேனி எல்லாம் பசலை ஆயிற்று என ஒருமை உணர்த்தி நின்றது, எஞ்சாப் பொருட்டு ஆவது ஒர் உரிச்சொல். |