றாற்போல்வனவற்றை விளக்க வந்தது இந்நூற்பா என வலிந்துரை யாதல் காண்க. |
ஒத்த நூற்பாக்கள்: |
| முழுதும் - | நன். 287 |
| ‘யான்நான்நீ தான் ஒருமை யாம்நாம் நீர்நீவிர் எல்லீர் நீயிர்தாம் எல்லாம் பன்மை.’ | தொ.வி.51 |
இருவன் இருத்தி முதலாக வாராமை |
190 | ஒருவன் ஒருத்திப் பெயர்மேல் எண்இல. | |
இது மேற்கூறிய எண் இயற்பெயருள் ஒரு சாரனவற்றிற்கு எய்தியது விலக்குகின்றது. இ-ள்: உயர்திணை ஆண்பால்பெயரும் பெண்பால் பெயரும் எண் அடியாகத் தோன்றும் காலத்து, ஒன்று என்பது அடியாக ஒருவன் ஒருத்தி எனத் தோன்றுவது அல்லது, அதன்மேல் நின்ற இரண்டு முதலிய எண் அடியாக இருவன் இருத்தி எனத்தோன்றுதல் உளவாகா என்றவாறு. |
விளக்கம் |
மேற்கூறிய என்றது-177, 178-ஆம் நூற்பாக்களை. எண்ணியற்பெயர் - எண் அடியாகத் தோன்றிய பெயர். |
பகுதி பன்மையாயின் பன்மைவிகுதியே சேர்தல் வேண்டலின், அன்ஈறும் இகரஈறும் ஆகிய விகுதிகள் இரண்டு முதலிய எண் அடியாகவரும் பெயரொடு பொருந்தா எனபது. |
ஒத்த நூற்பாக்கள்: |
| ‘ஒருமை எண்ணின் பொதுப்பிரி பாற்சொல் ஒருமைக்கு அல்லது எண்ணுமுறை நில்லாது.’ தொல். | சொல்.44 |