சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பெயரியல்-நூற்பா-33115

சிறுபான்மை ஆர் ஈற்று உயர்திணைப்பெயரும் பன்மைச் சொல்லொடு முடியும் எனவும்,
ஆர் ஈறு உயர்த்தல் பொருட்டாய் வரும் எனவும்,
 

 

‘கடுவன் முதுமகன் கல்லா மூலற்கு
வதுவை அயர்ந்த வன்பறழ்க் குமரி’
 
 

என்புழிக் கடுவன் மூலன்குமரி என்பன முறையே உயர்திணை ஆண்பால்
உணர்த்தும் அன் ஈறும் பெண்பால் உணர்த்தும் இகர ஈறும் பற்றி வருதலின்
விரவுப்பெயராம் அன்றே ஆயினும், அவை ஈண்டுப்பொருட்கு உபகாரப்படும்
கருப்பொருளை உணர்த்தி நிற்றலின் உயர்திணையை உணர்த்தாது அஃறிணையையே
உணர்த்தும் எனவும்,

பொருள் வகையான் அன்றி இந்நிலத்து இப்பொருள் இப்பெயரான் வழங்கப்படும்
எனத் திணை வகையான் உரிமை பூண்டு கருப்பெயருள் உணர்த்தி நிற்கும்
 

 

‘செருமிகு முன்பின் கூர்வேல் காளை’

நற்.184

 

‘திருந்து வேல்விடலை’
 

அகம். 195
என்றல் தொடக்கத்து விரவுப்பெயர்கள் இருதிணையும் உணர்த்துமேனும்
உயர்திணையே உணர்த்தும் எனவும் கொள்க. காளை விடலை என்பன
உயர்திணைப் பெயர் அல்லவோ எனின், ஓர் எருத்தையும் காளை விடலை என்ப
ஆதலின் விரவுப்பெயர் எனவே படும் என்பது.

இன்னும் அம்மிகையானே, எல்லாம் என்பது இருதிணைப் பன்மைக்கும் ஒத்த
உரிமைத்தேனும் உயர்திணை இடத்து வருங்கால் அத்திணைத் தன்மைப்
பன்மைக்கண் பெரும்பான்மையும்,
 

 

‘கண்டனிர் எல்லாம் கதுமென ஆங்கே
பண்டுஅறியா தீர்போல் நோக்குதிர்’
கலி.140
எனவும்,