சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

116 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

 

‘ஊடினீர் எல்லாம் உருவிலான் தன்ஆணை
கூடினீர் என்று குயில் சாற்ற’
 
சிலப். 8 வெண்பா.2

எனவும், முன்னிலைப் பன்மைக் கண்ணும்,
                    

 

‘நெறிதாழ் இருங்கூந்தல் நின்பெண்டிர் எல்லாம்
சிறுபாகர் ஆக’
 

கலி.97
எனப் படர்க்கைப் பன்மைக்கண்ணும் சிறுபான்மை வரும் எனவும், ‘இன்னன’
என்பதனால் தழீஇக்கொண்ட பெண்மகன் என்பது பெண்மகன் வந்தாள்- பெண்மகன்
இவள்- என ஈறு பற்றி ஆடூஉவிற்கு ஏற்ற முடிபு கொள்ளாது பொருண்மை பற்றி
மகடூஉவிற்கு ஏற்ற முடிபு கோடலும் கொள்க. சாத்தன் கொற்றன் என்றல் தொடக்கத்து
ஒருமைப் பெயர் நின்று, ஆரைக் கிளவியை ஏற்றுச் சாத்தனார் கொற்றனார்
எனநிற்றலின் இவை ஒருவர் என்னும் ஒருவரை உயர்த்திக்கூறும் பன்மைக்கிளவியின்
வேறாதலும், அலவன் கள்வன் என்றல் தொடக்கத்தன கடுவன் மூலன் என்றல்
தொடக்கத்தனபோல விரவுப்பெயராய் நின்று உயர்த்திணை உணர்த்தாது அஃறிணை
உணர்த்துவன அன்மையின், அவைசாதிப் பெயரேயாய் அஃறிணையே உணர்த்தி
நிற்றலின் ஈண்டு அமைக்க வேண்டுவது இன்று எனவும் உணர்க.
 

விளக்கம்
 

மேற்கூறிய என்றது 179ஆம் நூற்பாவினை.

ஒருவன் என்பது பொருள் பற்றி ஒருமைச்சொல் கொண்டு முடியாது, விகுதியாகிய
அர் ஈறு பற்றிப் பன்மைச்சொல் கொண்டு முடியும் என்பது. இதனைத்
தொல்காப்பியனாரும்,
 

 

‘ஒருவர் என்னும் பெயர்நிலைக் கிளவி
இருபாற்கும் உரித்தே தெரியுங் காலை’

தொல்.சொல்.191