சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

118 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

ஆனால் கருப்பொருள்களுள் அவ்வந் நிலத்து மக்களை சிறப்புவகையான்
உணர்த்தும், வெற்பன் பொருப்பன் காளை, மீளி, நாடன் தோன்றல், ஊரன் மகிழ்நன்,
சேர்ப்பன், புலம்பன் என்றல் தொடக்கத்துப் பெயர்கள் முறையே அவ்வந்நிலத்திற்கே
உரிமை பூண்டு நிற்கும் மக்களைச் சுட்டும் பெயர்கள் ஆதலின், சொல்அளவில்
விரவுப்பெயராயினும் பொருள் அளவில் உயர்திணையே உணர்த்தலின், உயர்திணைப்
பெயராகவே கொள்ளப்படும் என்பதனைத் தொல்காப்பியனார்,
 

 

‘திணையொடு பழகிய பெயரலங் கடையே.’
 

தொல்.சொல்.197
என்பதனால் கொள்ளவைத்தார்.

எல்லாம் என்பது உயர்திணைக்கண் வருவழித் தன்மைக்கே வரும் என்பது
தொல்காப்பியனார் கருத்தாதல்,
 

 

‘எல்லாம் என்னும் பெயர்நிலைக் கிளவி
பல்வழி நுதலிய நெறித்தா கும்மே’
 

தொல்.சொல்.186

 

‘தன்னுள் ளுறுத்த பன்மைக்கு அல்லது
உயர்திணை மருங்கின் ஆக்கம் இல்லை’
 

 
என்ற நூற்பாக்களால் பெறப்படுமேனும், சங்க காலத்திலேயே எல்லாம் என்னும் சொல்
முன்னிலைப் பன்மைக்கண்ணும் படர்க்கைப் பன்மைக்கண்ணும் அருகி வருதல்
காணப்பட்டாமையின், எல்லாம் என்பது தன்மைப்பன்மைக்கே பெரிதும் உரிமை
உடையதாகவும், முன்னிலைக் கண்ணும் படர்க்கைக்கண்ணும் அத்துணை உரிமை
யின்றியும் வரும் என்பது கொள்ளப்பட்டது.

புறத்துப்போய் விளையாடும் பேதைப் படுத்துப் பெண்ணைச் சுட்டும் பெண்மகன்
என்ற சொல் ஈறு பற்றி