காளைவிடலை என்பன உயர்திணைக்கும் அஃறிணைக்கும் பொதுவாக வரும் இயல்பினவாகிய சொற்கள் ஆதலின், அவை பொதுப்பெயர் எனப்பட்டன. ஆனால் அவை திணையொடு பழகிய பெயராகிய நிலையில் உயர்திணைக்கே உரிமை பூண்டு நிற்றல் பற்றி ‘நம்பிஆடூஉ’ என்பனவற்றொடு விடலை எனபதனையும் சிறப்புப்பெயர் என்றார். ‘எருத்தையும் காளை விடலை என்ப’ என்ற கருது சேனாவரையர் நச்சினார்க்கினியர்முதலிய சான்றோர் கொண்ட கருத்து என்பதும் ஓர்க. |