‘காளை வந்தான் காளை வந்தது’ என இக்காலத்துப் பயின்று வருவன (நன்.284 விருத்தி) என்று காட்டும் முனிவர், முற்காலத்து அவை பயிலாது வந்தனவாதல் வேண்டும் என்பதனையும் உட்கொண்டுள்ளமை காண்க. |
ஒத்த நூற்பாக்கள் |
| ‘ஒருவர் என்னும் பெயர்நிலைக் கிளவி இருபாற்கும் உரித்தே தெரியுங் காலை.’ | தொல்.சொல்.191 |
| ‘தன்மை சுட்டின் பன்மைக்கு ஏற்கும்.’ | 192 |
| ‘இயற்பயெர் முன்னர் ஆரைக் கிளவி பலர்க்குரி எழுத்தின் வினையொடு முடிமே.’ | 270 |
| ‘இறைச்சிப் பொருள்வயின் செய்யுளுள் கிளக்கும் இயற்பெயர்க் கிளவி உயர்திணை சுட்டா நிலத்துவழி மருங்கின் தோன்ற லான.’ | 196 |
| ‘திணையொடு பழகிய பெயரலங் கடையே.’ | 197 |
| ‘எல்லாம் என்னும் பெயர்நிலைக் கிளவி பல்வழி நுதலிய நெறித்தா கும்மே.’ | 186 |
| ‘தன்னுள் ளுறுத்த பன்மைக்கு அல்லது உயர்திணை மருங்கின் ஆக்கமி இல்லை.’ | 187 |
| ‘மகடூ மருங்கின் பால்திரி கிளவி மகடூ இயற்கை தொழில்வயி னான.’ | 194 |
| முழுதும் | நன்.289, மு.வீ.பெ. 46 |
| ‘பெண்மகன் என்னும் பெயர்வினை கொள்ளுங் கால்அதற் குரிய வினையொடு சிவணும்.’ | மு.வீ.பெ.46 |
| ‘இயற்பெயர் முன்னர் ஆரைக் கிளவி பலர்க்குஉரி எழுத்தின் வினையொடு முடியும்.’ | மு.வீ.ஒ. 16 |