சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பெயரியல்-நூற்பா-34121

ஆகுபெயர்
 

192 பொருள் முதல் ஆறோடு அளவை சொல் தானி
காரணம் காரியம் கருத்தன் ஆதியுள்
ஒன்றன் பெயரான் அதற்கு இயை பிறிதைத்
தொன்முறை உரைப்பன ஆகு பெயரே.
 
 

இது மேல் ஆக்கம் பற்றி வரும் ஆகுபெயர் என்றதன் இலக்கணம் கூறுகின்றது.

இள்: பொருள் முதலாகிய ஆறனுடனே அளவையும் சொல்லும் தானியும்
காரணமும் காரியமும் கருத்தாவும் முதலியவற்றுள் ஒன்றன் பெயரானே விடாதாக
விட்டதாக யாதானும் ஒருவாற்றான் அதனுக்கு இயைபுடைய பிறிது ஒன்றனைத்
தொன்றுதொட்டு வரும் முறையால் கூறுவன ஆகுபெயராம் என்றவாறு,
 

  வரலாறு:
கடுத்தின்றான், புளித்தின்றான்,
‘தாமரை புரையும் காமர் சேவடி’
 
குறுந். கடவுள்வாழ்த்து
  ‘ஆம்பல் நாறும் தேம்பொதி கிளவி’
 
குறுந்.300

என்றாற்போல்வன முதற்பொருளை உணர்த்தும் பொருட்பெயரான் அவற்றின் ஒருவழி
உறுப்பு ஆகிய சினைப்பொருளைக் கூறின.

குழிப்பாடி நேரிது- இப்பட்டுச்சீனம் என்றாற்போல்வன இடப்பெயரான் அவ்விடத்து
நிகழ்பொருளைக் கூறின.

கார் அறுத்தது- கூதிர்வீசும்- கார்த்திகை பூத்தது- என்றாற்போல்வன
காலப்பெயரான்- அக்காலத்தின்கண் உளவாகிய பைங்கூழையும் காற்றையும்
தோன்றியையும் கூறின.