என்றாற்போல்வன தொழிற்பெயரான் அவ்வத்தொழில் உற்று நின்ற பொருளைக் கூறின. இஃது ஓர் ஏறு- இஃது ஒருகுத்து- என்றாற்போல்வனவும் அன்ன; அவ்வத்தொழிலான் ஆய வடுக்களை உணர்த்தி நின்றமையின். இப்பொன் தொடி-இவ்வெள்ளிதுலாம்- இந்நெல்பதக்கு இப்பயறுதூணி- இம்மனை ஒருகோல் என்றால் போல்வன எடுத்தல் முகத்தல் முதலிய அளவுப்பெயரான் அங்ஙனம் அளக்கப்படும் பொருளைக் கூறின. அளக்கப்பட்ட பொருட் கண் கிடக்கும் இவ்வரையறைக் குணப்பெயர் பண்புப்பெயருள் அடங்குமேனும், விளங்குதற்பொருட்டு வேறு கூறினார். ஒன்று- துலாம்- நாழி- உழக்கு- ஆழாக்கு- கோல் என்பன அவ் வளவுகருவிகளை உணர்த்தின் இயற்பெயராம், இம்மணி ஒன்று- இப்பொன்துலாம்- இப்பால்நாழி- இந்நெய் உழக்கு-இவ்வெண்ணெய் ஆழாக்கு- இம்மனை ஒருகோல் என அவ்வக்கருவிகளான் அளக்கப்படும் பொருளை உணர்த்தின் ஆகுபெயராம் என்பாரும் உளராலோ எனின், கருவிகளும் இயற்பெயரான் அன்றி இவ்வரையறைக் குணப்பெயரான் உணர்த்தப்படுதலின் ஆகுபெயராய் இவற்றுள்ளே அடங்குவது அல்லது வேறு எனப்படா எனமறுக்க. ‘அளவை’ எனப் பொதுப்படக் கூறினாரேனும், ஏற்புழிக் கோடலான் நிறைப்பெயர் முதலியனவே கொள்க. என்னை? பொன்னை நிறுத்துப் பார்த்தும் நெல்லை அளந்து பார்த்தும் |