சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

124 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

இனி, ‘ஆத்’ என்றதனானே, யானை-பானை என்றல் தொடக்கத்து
உவமைப்பெயரான்- யானைவந்தான் பாவை வந்தாள் என உவமிக்கப்படும் பொருளைக்
கூறுவனவும்,

இற்றைஞான்று ஆதிரை- இற்றைஞான்று ஓணம் என்றல் தொடக்கத்து நாள்மீனின்
பெயரான் அந்நாளைக் கூறுவனவும்,

பொற்றொடி என்னும் இருபெயர்ஒட்டான் பொன்னும் தொடியும் அன்றி
அணிந்தாளைக் கூறுவனவும்,

அவை போல்வன பிறவும் ஆகுபெயராம் எனக்கொள்க.

இதுமேல் அன்மொழித்தொகை எனக் கூறப்படுதலின் ஈண்டுக் கூறவேண்டா
எனின், நன்றுசொன்னாய்! ஆகுபெயர்க்கும் அன்மொழித் தொகைக்கும்
தம்பொருள்உணர்த்தாது பிறிது பொருள் உணர்த்தி நிற்றல் இலக்கணம் என்றலின் அவை
இரண்டும் வேறு, அன்மையான் ஓரிடத்துக்கூற அமையுமேனும், இயற்பெயரும்
ஆகுபெயரும் எனப் பெயர் இரண்டாய் அடங்கும் வழிப்பொற்றொடி வந்தாள்
என்பதனை இருபெயர் ஒட்டு ஆகுபெயராகவும், தொகையாம் என்ற வழி அதனை
அன்மொழித் தொகையாகவும் கூறவேண்டுதலான் ஈரிடத்தும் கூறவேண்டும் என்க. இஃது
ஆசிரியர் தொல்காப்பியனாருக்கும் கருத்து ஆதல் சேனாவரையர் உரையான் உணர்க.
இக்கருத்தே பற்றி அன்றே,

    ‘அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை’ குறள்.1081

என்றவழிப் பரிமேலழகரும் கனங்குழை என்றதனை ஆகுபெயர் என்றதூஉம் என்க.

அற்றேல், மக்கட் சுட்டு என்றவழி மக்களாகிய சுட்டு மக்கட்சுட்டு; சுட்டு நன்கு
மதிப்பு; அஃது ஆகுபெயராய் மக்கட் பொருளை உணர்த்தும்; உணர்த்தவே, மக்கட்