சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பெயரியல்-நூற்பா-34129

என்பது இருபெயரொட்டு ஆகாது என்று விளக்க முற்பட்டமை வியப்பிற்குரியது.

கடுத்தின்றான்- விடாத ஆகுபெயர்;
                    குழிப்பாடிநேரிது- விட்ட ஆகுபெயர்; இத்திறம் விளக்கப்பட்டுள்ளது.
 

சூறாவளி
 

எண்ணுப்பெயர் ஆகுபெயர் ஆகாது என்றல் பொருந்தாமை விருத்தியுள் காண்க.

இவ்வதிகாரம் எழுத்து- இவ்வதிகாரம் சொல்- இவ்வதிகாரம் பொருள்-
என்றாற்போல்வன எழுத்துச்சொற்பொருள் என்னும் சொற்களான் அவற்றிற்கு இலக்கணம்
கூறிய அதிகாரங்களைக் கூறின என இவற்றைச் சொல் ஆகுபெயர்க்கு உதாணரமாகக்
காட்டினார். கடுத்தின்றான் புளித்தின்றான் என்றல் தொடக்கத்தனவும், கடு புளி என்றல்
தொடக்கத்துச் சொற்களான் காய் முதலிய பொருள்களைக் கூறலான் அவற்றையும்
சொல்லாகு பெயர் எனல் வேண்டும். அவ்வாறு வேண்டாமையான் இவையும்
சொல்லாகுபெயர் ஆகா என மறுக்க, எழுத்துச் சொற்பொருள் என்னும் தானிகளான்
அவ் விலக்கணங்களைக் கூறுதற்குத் தானம் ஆகிய படலங்களைக் கூறினமையான் இவை
தானிஆகுபெயரேயாம் என்க. இனித் திருவாசகம் திருவாய்மொழி எனச் சொல்லையே
உணர்த்தி நிற்கும் பெயர்களான் அச்சொல்லால் ஆக்கப்படும் நூலைக்கூறினமையின்
இவற்றைச் சொல்லாகுபெயர் என்னாமோஎனின், என்னாம்; என்னை? சொற்கு எழுத்து
முதற் காரணம் ஆயினாற் போலச் செய்யுட்கு முதற்காரணமாய் நிற்கும் மொழியின்
பெயரான் அச்செய்யுட்களை உணர்த்துதலான், அவை காரண ஆகுபெயர் எனப்படும்
ஆகலான் என்க. இனித்திருவாசகம் திருவாய்மொழி என்பன உண்மை