சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

130 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

யான் நோக்குவார்க்கு அன்மொழித்தொகை ஆவன அன்றி ஆகுபெயர் ஆகாமை
உணர்க.

‘திரைத்த இருது குறள்சிந்து தேம்பழுத்து’ என ஒரு செய்யுட்கு முதல் நிற்கும்
சொற்களான் அவ்வச் செய்யுட்களைக்கூறினமையின் இவையே சொல்லாகு பெயராம்
என்க இது சினைஆகுபெயருள் அடங்குமேனும் விளங்குதற்கு பொருட்டு வேறு கூறினார்
அளவையாகுபெயர் குண ஆகுபெயருள் அடங்குமேனும், அதனை வேறு கூறினாற்
போல் கொள்க.

அகத்தியம் தொல்காப்பியம் கபிலம் என்பன ஆகுபெயர் அல்லவாதல் விருத்தியுள்
காண்க.

ஆகுபெயர்க்கும் அன்மொழித்தொகைக்கும் வேற்றுமை விருத்தியுள் விளங்கக்
கூறினாம்; ஆண்டுக்காண்க. ஈண்டு ஆகுபெயரும் அன்மொழித்தொகையும் ஒன்று
என்றவர், குறிப்பில் தருமொழி இவை என்புழி ஆகுபெயர் எனவே
அன்மொழித்தொகையும் அடங்கும் என்று ஒழியாது, ‘ஆகுபெயர் வினைக்குறிப்பு
அன்மொழி விகாரம்’ (170) என வேறு கூறலான் அவ்விரண்டும் ஒன்றே என்றல்
அவர்க்கும் கருத்தன்மை உணர்க. பரிமேலழகியார் கனங்குழை என்றதனை ஆகுபெயர்
என்றாரால் எனின், அவர்
 

    ‘பொச்சாவாக்- கருவியால் போற்றிச் செயின்’
 
குறள்- 537

என்பதற்குப் பொச்சாவாமனம் என அந்தக்கரணத்தைக் கருவியாகக் கூறினார்;
அதனை மறுத்துப் பொச்சாவாமையாகிய கருவி எனத் தாமும் பெயரெச்சச்சூத்திரத்துள்
உரைத்தார் ஆதலின், அவர் கூறியன எல்லாம் உடன்பாடு என்பது தமக்கும்
கருத்தன்றென்க.

மக்கட்சுட்டு மக்களாகிய நன்கு மதிக்கப்படும் பொருள் என்றக்கால், நன்கு
மதிக்கப்படும் பொருளும் மக்களே