சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பெயரியல்-நூற்பா-34131

யாகலின் மக்களாகிய மக்கள் என வருவது அல்லது இன்னது இது என வாராமையின் மக்கட்சுட்டே இருபெயரொட்டு ஆகாது என்றார். உலகத்துப் பொருளையெல்லாம் உயர்திணைப்பொருள் அஃறிணைப்பொருள் என இரண்டாகப் பகுத்துக் கொண்டதற்கு ஏற்ப, மக்கள் என்பது பொருள் என்னும் பொதுமையின் நீக்கி உயர்திணைப்பொருளை விசேடித்து நிற்பச் சுட்டு என்பது ஆகுபெயராய் அப்பொருளின் உயர்ச்சி தோன்றச் சிறப்பித்து நிற்ப, இன்னது இது என ஒன்றனை ஒன்று விசேடித்து இரு பெயரும் ஒட்டி வருதலான் இருபெயரொட்டு ஆகாமை யாண்டையது என மறுக்க.
 

அமைதி
 

தொல்காப்பியனார் ‘இனைத்து எனக் கிளக்கும் எண்ணுக்குறிப் பெயரும்’
(தொல்.சொல்.170 நச்) என்ற தொடரால் எண்ணுப் பெயரே எண்ணப்படும் பொருளையும்
உணர்த்தும் என்று கூறியதும், எண்ணுப்பெயர் ஆகுபெயராகும என்று நூற்பா
இயற்றாததும், எண்ணுப் பெயர் ஆகுபெயர் ஆகாது என்பதை நச்சினார்க்கினியரும்
சேனாவரையரும் விளக்கியதும் காண்க. எழுத்து சொல் பொருள் என்ற சொற்களான்
அவற்றின் இலக்கணம் கூறிய அதிகாரங்கள் உணர்த்தப்பட்டன. இச்சொற்கள் தம்மை
விளக்கும் அதிகாரங்களை உணர்த்தலின், சொல்லாகுபெயர் என்பதன்கண் உள்ள
இயைபை நோக்குக. கடுத்தின்றான் என்புழி கடு என்ற மரப்பெயர் காயை
உணர்த்துதலான் அது முதலாகு பெயராதல் சிற்றறிவினார்க்கும் புலனாம். எழுத்து
என்பது ஆகுபெயராதற் கண்ணும் வேறுபாடு எவ்வளவு உள்ளது என்பது காண்க.
முனிவர் கூற்றான் அவருக்கே ஆகுபெயர் அன்மொழிக்கண் தெளிவின்மை காண்க.
அகத்தியம் முதலியன ஆகுபெயராதல் நேமிநாதநூலுடையார், நச்சினார்க்கினியர் முதலிய
சான்றோர் கருத்து ஆதலும் காண்க. ஆகுபெயரும் அன்மொழித்தொகையும் ஒன்று
என்று கொள்