சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பெயரியல்-நூற்பா-37,38143

அமைதி
 


 
‘பிறிது பிறிது ஏற்றலும் உருபுதொக வருதலும்
நெறிபட வழங்கிய வழிமருங்கு என்ப’
 
தொல்.சொல். 104
என்ற தொல்காப்பிய நூற்பாவிற்குச் சான்றோர் பலரும் உரைத்த உரையை உட்கொண்டு
நன்னூலார் இயற்றிய நூற்பாவின் இயல்பை நோக்காது, ‘ஆறன் உருபும்’ என்புழி அன்
என்பதனை வேண்டாவழிச் சாரியை என வலிந்து பொருள் கொண்டு முனிவர் கூறியது
சான்றோர் பலருடைய கருத்துக்கும் முரண்பட்டதாதல் வெளிப்படை. ஆறாம் வேற்றுமை
உருபு ஏனைய உருபுகளை ஏற்கும் என்பது உரையாசிரியர், சேனாவரையர்,
நச்சினார்க்கினியர், பேராசிரியர், மயிலைநாதர், சாமிநாததேசிகர் முதலிய சான்றோர்
கருத்தாதல் அறிக.
 

ஒத்த நூற்பாக்கள்:
 


 
முழுதும் நன். 293
  ‘அதனோடு ஐமுதல் ஆறும் ஏற்கும்’
 
தொ.வி. 63
  ‘ஓர் உருபு ஏனைய உருபொடு சிவணலும்
தொக்கு நின்று ஒழுகலும் வழுவா காவே.’
மு.வீ.பெ. 84
 
‘ஆறன் உருபும் ஏற்கும் அவ் வுருபே.’
மு.வீ.பெ. 51
என்ற நூற்பாவிற்கு அவ்வாசிரியர் சிவஞானமுனிவரைப்பின்பற்றி உரைஎழுதியுள்ளார்.
 
196 நீயிர் நீவிர்நான் எழுவாய் அலபெறா.
இஃது எய்தியது ஒருமருங்கு மறுக்கின்றது.