என்ற ஆசிரியர் அகத்தியனாருக்கும் இதுவே உடன்பாடு என்க. பொருண்மை சுட்டல் - ஆ உண்டு எனப் பண்புமுதலாயின சுட்டாது உண்மையே சுட்டலாம்; வியங்கோள் வருதல் - ஆ செல்க எனத் தன்ஏவலைக் கொள்ள வருதலாம்; வினைநிலை உரைத்தல் - ஆ கிடந்தது எனத் தன்வினை நிலையைச் சொல்ல வருதலாம்; பண்பு கொள வருதல் - ஆகரிது என வருதலாம்; வினைக்குறிப்பு ஆதல் ஒப்புமையான், ஆ இல்லை - ஆ அல்ல என்னும் தொடக்கத்துக் குணப்பொருள அல்லா வினைக்குறிப்பொடு தொடர்தலும் கொள்க. இவை எல்லாம் வினைப்பாற்பட்டன. வினாவிற்கு ஏற்றல்-அஃது யாது. அஃது எவன் என வினாச் சொல்லொடு தொடர்தலாம்; பெயர்கொள வருதல்- ஆ ஆயிரம், ஆ ஆம்பல், ஆ வெள்ளம் என முடிக்கப்படும் சொல் ஆகாது முடிக்கும் சொல்லாயே வருதலாம். பிறவும் அன்ன. |