“பெயர்க்கு ரூபபேதம் காட்டும் வேற்றுமைஉருபு வடமொழிக்கு அல்லது தமிழ்மொழிக்கு இல்லாமைகண்டு ‘எழுவாய் விபத்தி திரிபில்பெயர்’ என்றாம். ‘எழுவாய் வேற்றுமை பெயர் தோன்றுநிலையே’ (தொல்.சொல். 65) எழுவாய் உருபு திரிபில் பெயரே’ (நன்.295) எனத் தொல்காப்பியனாரும் நன்னூலாரும் கூறினார் என்க. இனி, உரையாசிரியரும் நச்சினார்க்கினியரும் பெயர் தனித்து நின்றகாலை எழுவாய் வேற்றுமை ஆகாது என்றும், அது ‘பெயர் தோன்றுநிலை’ என்பதற்கு வலிந்து பயனிலை தோன்ற நிற்கும் நிலையாகிய அவசரத்தில் எழுவாய் வேற்றுமையாம் என்றும் உரைத்தார் பெயர்தாம் பயனிலை தோன்ற நின்றால் கர்த்திருகாரகம் என்றும் எழுவாயாவதன்றி ரூபபேதம் பெற்ற எழுவாய் வேற்றுமை ஆமோ என மறுக்க. அன்றியும் அவ்வாறே ‘நிலங்கடந்தான்’ முதல் ‘குன்றக்கூகை’ இறுதியாக ஆறுருபும் வாராது தத்தம் பயனிலை. |