சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பெயரியல்-நூற்பா-39149

தோன்ற நிற்கும் நிலைமையே அமையும்; அங்ஙனம் அமைவனவற்றை ‘ஐயெனப்
பெயரிய’ ‘ஒடு எனப் பெயரிய’ எனப் பெயர் ஒழிந்த ஆறு விபத்தியும் எடுத்து ஓதியது
நின்று பயனின்மை என்னும் குற்றம் தங்குதற்கோ எனக் கூறி மறுத்து அஃது
உரையன்மையாதல் அறிக.

இனிச் சேனாவரையர் அச்சூத்திரத்திற்கு முதல் வேற்றுமையாவது பெயர் தோன்றிய
துணையாய் நிற்கும் நிலைமை என்றும், பெயர் தோன்றிய துணையாய் நிற்கும்
நிலைமையாவது உருபும் விளியும் ஏலாமையும் பிறிதொன்றனோடு தொடராமையும்
நிற்கும் நிலைமை என்றும் கூறி,

பொருண்மை சுட்டலுள் உருபு ஏற்றல் பெயர்க்கு இலக்கணமாயினும் உருபு ஏலாத
வழியும் பெயராமாறு போல எழுவாய் வேற்றுமை கிரியாசமாத்தியாகிய பயனிலை
கொள்ளாதவழியும் எழுவாய் வேற்றுமையாம் என்றும், செயப்படுபொருள்
முதலியவற்றிற்கும் கருத்தாவிற்கும் பொருள் மாத்திரமே ரூபபேதம் காட்டும் வேற்றுமை
என்றும், பன்மை பற்றிய வழக்காலே ரூபபேதம் காட்டாத கருத்தாவாகிய பெயரையும்
எழுவாய் வேற்றுமை என்றார் என்றும் கூறி உரையாசிரியர் முதலாயினாரை
மறுத்தலானும் யாம் உரைத்ததே பூர்வாசிரியருக்கும் கருத்தாயிற்று” என்று பிரயோக
விவேகநூலார்
 

   
 
‘தேற்றும் தமிழுக் கெழுவாய் விபத்தி திரிபில்பெயர்
தோற்றும் பிறவுரு போராறும் வேற்றுமை தோன்றி
நிற்கும் ஆற்றும் கருத்தாக் கருமம் காரணம் அவதி
கொள்வோன் சாற்றும் தொழிற்கிடமென்றறு காரகந் தாமுளவே.
 
பி.வி.8

என்ற நூற்பாவுரையில் கூறியுள்ளார்;