சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

150 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

மேலும், ‘ஏற்றும்.....வேற்றுமை’ (நன்.295) எனப்பொருள் வேற்றுமைப்படும் உருபு ஏற்ற
பெயரையும் வேற்றுமை என்பர் நன்னூலார்.

தொல்காப்பியர் ‘உருபு தொடர்ந்து அடுக்கிய வேற்றுமைக் கிளவி’ தொல்.சொல்.
102) ‘ஐஎனப் பெயரிய வேற்றுமைக் கிளவி’ (தொல்.சொல்.71) என உருபு ஏற்ற
பெயரையும் உருபையும் வேற்றுமை என்பர்’ என்றும் அந் நூற்பாவுரையுள் கூறியுள்ளார்.

எழுவாய் வேற்றுமைபற்றிய சான்றோர் பலருடைய கருத்துக்களையெல்லாம்
தொகுத்து, இலக்கணக்கொத்து நூலார்,

   
 
‘எழுவாய் வேற்றுமைக்கு உருபே இன்று
பெயரே பயனிலை கொள்ளும் தன்மையே
பயனிலை தன்னைக் கொண்ட தன்மையே
வினைமுத லாதலே விகாரப் பெயரே
பெயர்ப்பின் விகுதி பெருதலே ஆயவன்
ஆனவன் ஆவான் ஆகின் றவன்முதல்
ஐம்பால் சொல்லும் பெயர்ப்பின் அடைதலே
உருபென வெவ்வேறு உரைத்தார் பலரே.’
 
இ.கொ.25
என்று குறிப்பிட்டுள்ளதும் காண்க,

எழுவாய் வேற்றுமையாகிய கருத்தா, இலக்கணக் கொத்துதில்
 
   
 
‘இருவகைச் செயப்படு பொருளே ஏது
தன்வசம் தெரியா நிலைதடு மாற்றம்
தொழிற்பெயர் ஏழில் தோன்றும் வினைமுதல்
கருவி இடம்கொள் வானினும் கருதுவர்.’
26
   
 

‘இருவினை முதலா ஒருவினை யும்உள.’
27
 
‘ஏவுதல் இயற்றுதல் இவையின் வேறாதல்
எனவினை முதல்மூ வகையாம் என்ப’
28