| ‘வினைமுதல் இன்னும் விரிக்கின் பெருகும்’ 29 | இ.கொ.25 |
என்ற நூற்பாக்களில் பலவகையாக விளக்கப்பட்டிருத்தல் உளங்கொளத்தகும். இச்செய்திகளே பிரயோக விவேகத்தில் வடசொற் பெயர்கொண்டு |
| ‘ஏயும் கருமம் சுதந்திரம் ஏதுஎன்று எண்ண விரிந்து ஆயும் கருத்தன் அபிகிதம்; அநபிகிதம்ஒன்றே’ | 11 |
என்று கூறப்பட்டுள்ளன. இவற்றின் விரிவை உரையில் காணலாம். இலக்கணக்கொத்து நூலார் குறிப்பிடும் ‘கருவிஇடம் கொள்வானினும் கருதுவர்’ என்ற கொள்கை பிரயோக விவேக நூலார்க்கு உடன்பாடன்று. |
| ‘சொல்லப் படுநிலை சொல்லப் படாநிலை அபிகிதம் அநபி கிதமென மொழிப தெரிநிலை தெரியா நிலையென வும்பெறூஉம்.’ | இ.கொ. 11-உரைச்சூத்திரம் |
ஒத்த நூற்பாக்கள் |
| ‘அவற்றுள் எழுவாய் உருபு பெயர் தோன்று நிலையே.’ | தொல்.சொல். 65 |
| ‘பொருண்மை சுட்டல் வியங்கொள வருதல் வினைநிலை உரைத்தல் வினாவிற்கு ஏற்றல் பண்புகொள வருதல் பெயர்கொள வருதல் என்று அன்றி அனைத்தும் பெயர்ப்பய னிலையே.’ | 66 |
| ‘பெயர் எழுவாய் வேற்றுமையாம் பின்பதுதான் ஆறு ‘பயனிலையும் ஏற்கப் படுதல்.’ | நன். 295 |
| ‘எழுவாய் உருபாம் இயல்பின் பெயரே மிண்டதன் பொருளாம் வினைபெயர் வினாவே.’ | தொ.வி. 56 |