இஃது எய்தாதது எய்துவிக்கின்றது. எழுவாய் வேற்றுமை வெளிப்படத்தோன்றிப் பயனிலை கோடலே அன்றித் தோன்றாது நின்றும் பயனிலை கொள்ளும் என்றலின். இ-ள்: மூன்றிடத்துப் பெயரும் செவிப்புலனாகத் தோன்றி நின்று பயனிலைகோடல் செவ்விது என்பர் ஆசிரியர் என்றவாறு. எனவே, அவ்வாறு தோன்றாது நின்று பயனிலை கோடலும் உண்டு. அது செவ்விது அன்று என்றவாறாம் பெயர் என்றது ஈண்டு எழுவாயை. கருவூர்க்குச் செல்லாயோ சாத்தா என்றவழிச் செல்வல் எனவும், யான்யாது செய்வல் என்றவழி இதுசெய் எனவும், இவன் யார் என்றவழி படைத்தலைவன் எனவும் செப்பியவழி, யான்-நீ- இவன் என்னும் எழுவாய் வெளிப்படாது நின்று செல்வல்- இதுசெய்- படைத்தலைவன்என்னும் பயனிலை கொண்டவாறு கண்டுகொள்க. செல்வல்- இது செய் என்னும் தன்மை முன்னிலை வினைகளான் யான்-நீ- என்பனவற்றின் பொருளும் உணரப்படுதலின் யான் செல்வல்-நீ இது செய்-எனப் பெயர் வெளிப்படுதல் பயம் இன்று ஆயினும், வழக்குவலி உடைத்து ஆகலின் அவ்வாறு வருதல் பயமின்று எனப்படாது என்பது விளக்கிய ‘எவ்வயின் பெயரும்’ என்றார் என்பது. அவ்வியலான் நிலையல் எனவிரியும். பயனிலைக்கு |