சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பெயரியல்-நூற்பா-43173

மாணாக்கர்க்கு நூற்பொருள் உரைத்தான் என்புழி உரைத்தல் கொடைப் பொருட்டு ஆயினவாறு காண்க.

அல்லவை செய்வார்க்கு அறம் கூற்றம் முதலியன பகைமைப் பொருட்கண் பிறவாய்பாட்டான் வந்தன.

உற்றார்க்கு உரியர் பொற்றொடி மகளிர் முதலியன தகுதிப் பொருட்கண்
பிறவாய்பாட்டான் வந்தன.

தொல்காப்பியனார் இயற்றிய

  ‘அதற்கு வினை உடைமையின் அதற்குஉடம் படுதலின்
அதற்குப் படுபொருளின் அதுவாகு கிளவியின்
அதற்கியாப் புடைமையின் அதற்பொருட் டாதலின்
நட்பின் பகையின் காதலின் சிறப்பின்என்று
அப்பொருட் கிளவியும் அதன்பால என்மனார்’
 
தொல். சொல். 76
என்ற நூற்பாவின் உரையில் கூறப்பட்டனவற்றுள் பெரும்பான்மைய
கொள்ளப்பட்டுள்ளன.

ஈண்டுக் கொள்ளப்பட்ட எடுத்துக்காட்டுக்களில் ஒரு கூறு மயிலைநாதர் உரையிலிருந்தும் (நன்.297) மறு கூறு நச்சினார்க்கினியர் உரையிலிருந்தும் (தொல்.சொல். 76, 77) கொள்ளப்பட்டன. விளக்கங்கள் பெரும்பான்மையும் நச்சினார்க்கினியர் உரைத்தனவே. இனி, இலக்கணக்கொத்து நூலார், நான்காம் வேற்றுமை பற்றி,
 

  ‘கேளாது ஏற்றல் கேட்டே ஏற்றல்
ஏலாது ஏற்றல் ஈவோன் ஏற்றல்
உயர்ந்தோன் ஏற்றல் இழிந்தோன் ஏற்றல்
ஒப்போன் ஏற்றல் உணர்வின்று ஏற்றல்
விருப்பாய் ஏற்றல் வெறுப்பாய் ஏற்றல்
ஆதியாய்ப் பலவும் அறைந்தனர் கொள்வோன்’
36