| ‘கொள்வோளை இன்னும் கூறின் பெருகும்’ 37 | |
என்று கூறிய செய்திகளையும், பிரயோக விவேக நூலார், |
| ‘அநிராகருத் தாவும் பிரேரகமும் கொடையெதிர் கூற்றுஅநு மந்தாவும் ஆம் என்பர்கொள்பவனே’ | பி.வே.13 |
என்று கூறியதையும் நோக்குக. |
| ஒத்த நூற்பாக்கள் | |
| ‘நான்காகுவதே கு எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி எப்பொருளாயினும் கொள்ளும் அதுவே.’ | தொல்.சொல்.75 |
| ‘அதற்கு வினை......................என்மனார்.’ ‘............................குப்பொருட்டென்பது மெய்திகழ் வேற்றுமை நான்கா வதாம்மிக்க கோளியிலே.’ | வீ.சோ.34 |
| ‘ஓதும் குகர வுருபுநான் காவதஃது யாதிடத்தும் ஈபொருளை ஏற்குமாம்.’ | நே.சொல்.19 |
| முழுதும் ‘குவ்வே நான்கனது உருபா கும்மே.’ ‘கொடைபகை சிறப்புக் காதல் தகுதி அதுவாதல் முறைபொருட்டு அதன்பய னிலையே, | நன். 298, தொ.வி.59 மு.வீ.பெ.19
60 |
| ஐந்தாம் வேற்றுமை | |
202 | ஐந்தா வதற்குஉருபு இன்னும் இல்லும் நீங்கல் ஒப்புஎல்லை ஏதுப் பொருள்வயின் இதனின்இற்று இதுஎன வரல்அதன் பொருளே. | |
இஃது ஐந்தாம் வேற்றுமை உருபும் பொருளும் உணர்த்துகின்றது. |