வண்மைநிலை விதியானது தகுதி அவாய்நிலையைக் காட்டிலும் மிகவும் விரியும் என்க. தொல்காப்பியர் இம்மூன்றையும் உள்ளடக்கி ‘நிறுத்த சொல்லும் குறித்து வருகிளவியும் (தொல்.110) என்றார்.” இ.கொ.105 உரைதொகைநிலை வகையால் தொடர்தலையும் தொகாநிலை வகையால் தொடர்தலையும் அவாய்நிலை முதலிய மூன்றனோடும் தனித்தனியே கூட்டிக்கொள்க. தொடர்மொழி தொகைநிலை தொகாநிலை என இரு வகையான் வரும் என்பர் தெய்வச்சிலையார். தொல்.சொல். 1 யானைக்கோடு - தொகைநிலை வகை சாத்தன் உணடான் - பயனிலை வகை நிலனும் நீரும் - எண்ணுநிலை வகை |