கண்ணின்று சொல்லியானை என்கண் நின்று இவை சொல்லற்பாலை அல்லை என்றும், ஊர்க்கால் செய்யை ஊர்க்கண் செய் என்றும், ஊர்ப்புறத்து நின்ற மரத்தை ஊர்க்கண் மரம் என்றும், எயில் அகத்துப்புக்கானை எயில்கண்புக்கான் என்றும், இல்லுள் இருந்தானை இல்லின்கண் இருந்தான் என்றும், அரசன்உழை இருந்தானை அரசன்கண் இருந்தான் என்றும், ஆலின்கீழ்க் கிடந்த ஆவை ஆலின்கண் கிடந்தது என்றும், மரத்தின்மேல் இருந்த குரங்கை மரத்தின் கண் இருந்தது என்றும், ஏர்ப்பின் சொன்றானை ஏர்க்கண் சென்றான் என்றும், காட்டுச்சார் ஓடுவதனைக் காட்டின்கண் ஓடுவது என்றும், உறையூர்க்கு அயல்நின்ற சிராப்பள்ளிக் குன்றினை உறையூர்க்கண் குன்று என்றும், எயில்புடை நின்றாரை எயிற்கண் நின்றார் என்றும், வடபால்வேங்கடம் தென்பால்குமரி என்பனவற்றை வடக்கண்வேங்கடம் தென்கண்குமரி என்றும், புலி முன் பட்டானைப் புலிக்கண் பட்டான் என்றும், நூலின் இடையும் கடையும் தலையும் நின்ற மங்கலத்தை நூற்கண் மங்கலம் என்றும், கைவலத்து உள்ளதனைக் கைக்கண் உள்ளது என்றும், |