சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பெயரியல்-நூற்பா-46191

பெயர்ப்பொருளை வேறுபடுத்தாமையானும் அவை உருபுகள் ஆகா என்றார்.

நன்னூலார் வாய், வயின், அளை முதலியவற்றையும் இடப்பொருள் உருபு என்றார்.
இவ்வாசிரியர் அவை இடப்பொருள் உணர்த்தும் பெயர்களே எனவும், பெயர்ப்பொருளை
ஏனைய உருபுகள்போல வேறுபடுத்தும் தன்மைய அல்ல எனவும், வாய் வயின் முதலிய
பொருள்கள் பற்றிக் கண் விரித்துக் காண்டல் இயலாது எனவும் கூறி அவற்றைப் பெயரே
என்று முடிவு செய்கிறார்.

நச்சினார்க்கினியர், முன்னரெல்லாம் தொல்காப்பியனார் வேற்றுமை பற்றிய
நூற்பாக்களில் முதலில் உருபுகூறி அடுத்த நூற்பாவில் உருபு கொண்டு முடியும்
சொற்களாகிய பொருளையே கூறியுள்ளார் ஆதலானும், கண் கால் முதலியன கண்
உருபின் பொருள்பட வருவனவே யல்லது முடிக்குஞ்சொல் அன்மையானும்,
உருபுஇடைச்சொல் பிறிது அவண் நிலையலாய்ச் சாரியை ஏற்றது என்றலே ஏற்றது
ஆதலானும் இவை ஏழன் உருபே என்பர்.
 

  இவ்வேழாவது பற்றி இலக்கணக்கொத்துநூலார்
‘உரிமை இருவகை ஓரிடம் எங்கும்
என நான்கு என்றே இயம்புவர் இடனே
காலம் திக்குஆ காயம் வெயில் இருள்
நிலம்அரு உருமுதல் நிகழ்த்தப் படும்இடம்
கூட்டிப் பிரித்தல் பிரித்துக் கூட்டல்
இருவரின் முடியும் ஒருவினைத் தொழிற்பெயர்
எனமூ வகைப்படும் இடமல் லாவிடம்
இடத்தின் நிகழ்பொருள் இருவகை அருவுரு’
‘இடத்தின் இலக்கணம் இன்னும் பலவாம்’








42
43
 
எனவும், பிரயோகவிவேக நூலார்