சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

192 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

  ‘விடயம் ஒரோவழி மேவுதல்எங்கும் வியாபகம் என்று
அடையஇம் மூன்று வகையான் விரியும் அதிகரணம்.

பி.வி. 13
எனவும் கூறியமை காண்க.
 

சூறாவளி
 

  கண்கால் முதலியன உருபு ஆகா என்றார்; அவை ஓர் இடத்தினை வரைந்து
உணர்த்துங்கால் பொருளாதலும், ஐம் முதலியன போலச் சாத்தனுழை இருந்தான்-
சாத்தன்முன் வந்தான்- எனத் தனக்கென ஓர் பொருள் இன்றிப் பெயர்ப்பொருளை
இடமாக வேறுபடுத்துங்கால் உருபு ஆதலும் ஆகிய வேறுபாடு உணராமையின்.
 

அமைதி
 

  கண்கால் முதலியன ஏழன் உருபின் பொருள் என்ற சேனாவரையர் மதத்தை
இவ்வாசிரியர் பின்பற்றியுள்ளார். அவர் கூறியுள்ள விளக்கங்களையே இவரும்
குறிப்பிட்டுள்ளார். இவர் கருத்து ஒருசாரார் மதம் என்று கொள்ளத்தக்கது. முனிவர்
போற்றும் சேனாவரையர் கொள்கை இவ்வாசிரியர்வழி வந்தவிடத்து மறுக்கப்படுவது
வியப்பைத் தருகிறது.
 

ஒத்த நூற்பாக்கள்:

  ‘ஏழாகுவதே
கண்எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
வினைசெய் இடத்தின் நிலத்தின் காலத்தின்
அனைவகைக் குறிப்பின் தோன்றும் அதுவே’

‘கண்கால் புறம்அகம் உள்உழை கீழ்மேல்
பின்சார் அயல்புடை தேவகை எனாஅ
முன்இடை கடைதலை வலம்இடம் எனாஅ
அன்ன பிறவும் அதன்பால என்மனார்’





தொல்.சொல்.81




தொல்.சொல்.82
மு.வீ.பெ.67