இஃது எட்டாம் வேற்றுமை உருபும் பொருளும் உணர்த்துகின்றது.
இ-ள்: எட்டாம் எண்ணு முறைமைக்கண் நின்ற வேற்றுமைக்கு உருபு விளி ஏற்கும்பெயரின் இறுதி திரிதலும், கெடுதலும், பிறிது வந்து அடைதலும், இயல்பு ஆதலும், ஈற்றுஅயல் நின்றதன் திரிபும் ஆம்; அதன்