சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

194 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

பொருள் படர்க்கை இடத்தாரை ஒருவன் தனக்கு எதிர்முகமாக விளித்தலாம் என்றவாறு.

‘எய்துபெயர்’ எனவே, எய்தாப்பெயரும் உள என்பதாயிற்று. அவை மேற்கூறுப.
படர்க்கை இடத்தார் எனவே, ஏனை இடத்தார் ஈண்டே விலக்கப்பட்டார் என்பதூஉம்
பெற்றாம். படர்க்கையோரை என்றாரேனும்,
 

  ‘ஒருபால் கிளவி எனைப்பால் கண்ணும்
வருவகை தானே வழக்கு என மொழிப’
 


தொல்.பொருள்-22
 

என்ப ஆதலின் அவ்விடத்து ஐம்பாலும் கொள்க இயல்பாய விளி உருபிற்கும்
பெயர் உருபிற்கும் வடிவான் வேற்றுமை இன்றேனும் பொருளான் உளது எனக்கொள்க.
தான் என்பது சந்த இன்பப்பொருட்டு வந்தது. 47
 

 விளக்கம்
 
 
  எட்டாம் எண்ணும் முறைமை - 194 ஆம் நூற்பாச் செய்தி
நல்லாள் - நல்லாய் - இறுதிதிரிந்தது.
ஊரன் - ஊர - இறுதிகெட்டது
மகன் - மகனே - பிறிது வந்து அடைந்தது.
அடிகள் - அடிகள் - இயல்பாயது.
மக்கள் - மக்காள் - ஈற்றயல் நின்றது.
 
 
    திரிந்தது.
                    விளியின் பொருள் படர்க்கைப் பொருளை முன்னிலைப் படுத்துதலாம்.

விளி எய்தாப் பெயர்கள் 216 ஆம் நூற்பாவில் கூறப்படும். படர்க்கையோர் எனப்
பலர்பால் மேல்வைத்து ஓதினாலும், படர்க்கையிடத்து ஆண்பால் பெண்பால் பலர்பாலும்
ஒன்றன்பால் பலவின்பால் என்ற ஐந்தும் கொள்ளப்படும்.