இயல்பாய விளி உருபிற்கும் பெயர் உருபிற்கும் வரி வடிவில் வேற்றுமை இன்று எனினும், ஒலிவடிவில் உண்மை அறிக; பொருள் நோக்கியும் உணரலாம். |
| ‘அழைத்தல் ஒன்று அன்றி வேறு இன் மையின் விளிக்குச் சூத்திரம் விளம்பிலம் என்க.’? என்ற இலக்கணக்கொத்து நூற்பாவும், |
|
| ‘பண்மை ஒருமை விளி துற்றிய சம்புத்தி சம்போ தனம்எனத் தோன்றிடுமே’(17)
என்ற பிரயோக விவேகநூற்பாப் பகுதியும் உளங்கொள்க. | |
ஒத்த நூற்பாக்கள்: |
| ‘விளியெனப் படுப கொள்ளும் பெயரொடு தெளியத் தோன்றும் இயற்கைய என்ப’.
‘அவ்வே இவ்வென அறிதற்கு மெய்பெறக் கிளப்ப.’
‘ஆய்ஆள்ஈ ஏஅவ்வொடு ஆஆன்ஓல் ஓய்ஈர் அளபெடைகள் மாயா விளியின் உருபுகள் மற்றவை முன்னிலைக்கண்ணேயாகும்’
‘ஈறு திரிதலும் ஈற்றயல் நீடலும் வேறு வருதலும் மெய்இயல்பும்- கூறும் இரண்டீற்று மூவகைப்பேர் முன்னிலைக்கண் என்றும் திரண்டுவிளி ஏற்கும் திறம்.’ முழுதும் நன். 303, ‘விளியெனப் படுப ஏற்கும் பெயரொடு விளங்கத் தோன்றும் இயற்கைய என்ப.’
‘அதுவே, விளிகொளும் பெயரும் விளிகொளாப் பெயரும் எனஇரு திறத்தவாம் என்மனார் புலவர்.’ |
தொல்.சொல். 118
தொல்.சொல். 119
வீ.சோ. 36
நே.சொல்.24 தொ.வி. 69
மு.வீ.பெ.98
மு.வீ.பெ.99 |