அஃறிணையீறு- உயிர்ஈறு பன்னிரண்டும், மெய்யீறு ஞணநமண யரல வழள என்ற பதினொன்றும் ஆகிய இருபத்து மூன்றனுள் ஏற்பன. இவை விளியேற்கும் ஈறுகளாம். படர்க்கையோரை முன்னிலைப்படுத்தி அவருடன் உரையாடும் வாய்ப்பு நிகழும் இடத்திலேயே விளிவேற்றுமை பயன்படும் என்றார். விளியேற்கும் உகரஈறு பெரும்பான்மை குற்றிய லுகர ஈறாகவும் சிறுபான்மை முற்றியலுகரஈறாகவும் வரும் என்பது முறையே தொல்காப்பியனார், தொல்காப்பிய உரையாசிரியர்கள் ஆகியோர் கருத்தாகும். |