சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

198 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

    ‘இ உ ஊவோடு ஐ ஓ னளரல
யவ்வீற்று உயர்திணை ஓரஅல் இவற்றொடு
ணஃகான் ஆ ஈறு ஆகும் பொதுப்பெயர்
ஞநஒழி அனைத்தீற்று அஃறிணை விளிப்பன’.

‘இ உ ஐ ஓ இறுதிக் கிளவி
உயர்திணை மருங்கின் விளியேற் கும்மே.’

‘உகரம் தானே குற்றிய லுகரம்’.

‘உயர்திணை மருங்கின் ஏனையஉயிர் விளியா.’

‘உயர்திணை மருங்கின் னரலள இறுதி
விளிக்கும் என்மனார் மெய் உணர்ந்தோரே’.

‘ஏனைய புள்ளிகள் விளியே லாவே’.

‘மெய் உயிர் இறுதி விரவுப் பெயர்ச்சொல்
உயர்திணைப் பெயரொடும் ஒத்து நடக்கும்’.

‘ஆவியும் ஒற்றம் அந்தம் ஆகிய
அஃறிணைப் பெயரெலாம் ஏயொடு சிவணும்’.




நன். 304

மு.வீ.பெ.100

 103

104


108

109


131



132
 
 பொதுவாகிய விளியுருபு
 
 
207 இம்முப் பெயர்க்கண் இயல்பும் ஏயும்
இகர நீட்சியும் உருபாம் மன்னே.
 
 

இது மூவகைப் பெயர்க்கும் பொதுவாகிய விளிஉருபும் தொகுத்து உணர்த்துகின்றது.

இ-ள்: மேல் விளி ஏற்பன இவை என்று வரைந்து ஓதப்பட்ட உயர்திணைப்பெயர்
விரவுப்பெயர் அஃறிணைப்பெயர் என்னும் மூவகைப் பெயர்க்கண்ணும் இயல்பாதலும்,
பிறிது வந்து அடைதலும் ஏகாரம் மிகுதலும், இகரஈறு ஈகாரமாய்த் திரிதலும்
விளிவேற்றுமைக்கு உருபுகளாம் என்றவாறு.