வரலாறு: நம்பிவாழி- வேந்துவாழி- திருவாழி- ஆடூஉவாழி- நங்கைவாழி- கோவாழி- என உயிர்ஈற்று உயர்திணைப் பெயர்கள் அண்மைக்கண் இயல்பு ஆயின. கணி கணியே- வேந்து வேந்தே- திரு திருவே- ஆடூஉ ஆடூஉவே- கோ கோவே- என உயிர்ஈற்று உயர்திணைப் பெயர்கள் பிறிதுவந்து அடைதலாய் ஏகாரம் மிக்கன. நம்பி நம்பீ- தோழி தோழீ- என இகரஈற்று உயர்திணைப் பெயர்கள் ஈகாரம் ஆகித் திரிந்தன. |
| னகர ஈற்று உயர்திணைப் பெயருள், ‘நம்பன் சிறிதே இடைதந்து இது கேட்க’ | சீவக. 1975 |
என அன்ஈறும், சேரமான் மலையமான்- என ஆன்ஈறும் அண்மைக்கண் இயல்பு ஆயின. |
| ‘படிவ உண்டிப் பார்ப்பன மகனே’ குறுந். | 156 |
என முறைமை சுட்டா மகனும், |
| ‘தென்னவனே தேர்வேந்தே தேறுநீர்க் கூடலார் மன்னவனே மார்பின் மறு’ | |
என அன்ஈறும், தம்முன் தம்முனே என உன் ஈறும் பிறிது வந்து அடைதலாய் ஏகாரம் மிக்கன. கடவுள் வாழி, அடிகள் கூறீர், கோமாள் கூறாய், கடியாள் கூறாய், |
| ‘ஆவும் ஆன் இயல் பார்ப்பன மாக்களும்.............. எம்அம்பு கடிவிடுதும் நும்மரண் சேர்மின்’ | புறம்-9 |
என ளகர ஈற்று உயர்திணைப்பெயர்கள் அண்மைக்கண் இயல்பு ஆயின. |
| ‘அகவன் மகளே அகவன் மகளே’ | குறுந்.23 |
என முறைமை சுட்டா மகள் என்னும் ளகர ஈற்று உயர்திணைப்பெயர் பிறிது வந்து அடைதலாய் ஏகாரம் மிக்கது, |