| என ரகர ஈற்று உயர்திணைப்பெயர்கள் அண்மைக்கண் இயல்பாயின. இளையவர் இளையவரே, வந்தவர் வந்தவரே, கரியவர் கரியவரே என ரகார ஈற்று உயர்திணைப்பெயர்கள் ஆண்மைக்கண் பிறிது வந்து அடைதலாய் ஏகாரம் மிக்கன. குரிசில் கூறாய், தோன்றல் கூறாய், ஆண்பால் கூறாய், பெண்பால் கூறாய் என லகர ஈற்று உயர்திணைப்பெயர்கள் அண்மைக்கண் இயல்பாயின. |
என லகர ஈற்று உயர்திணைப்பெயர்கள் பிறிது வந்து அடைதலாய் ஏகாரம் மிக்கன.ஆய்வாழி என யகர ஈற்று உயர்திணைப்பெயர் அண்மைக்கண் இயல்பு ஆயிற்று, ஆயே கூறாய் என யகர ஈற்று உயர்திணைப்பெயர் பிறிது வந்து அடைதலாய் ஏகாரம் மிக்கது. பிண வாராய், சாத்தி கூறாய், பூண்டு கூறாய், அழிது வாராய், தந்தை தாராய், அன்னை அருளாய் என உயிர் ஈற்று விரவுப் பெயர்கள் அண்மைக்கண் இயல்பாயின. பிணாவே, கூறாய், பூண்டே கூறாய் என உயிர் ஈற்று விரவுப் பெயர்கள் பிறிது வந்து அடைதலாய் ஏகாரம் மிக்கன. சாத்தி சாத்தீ, எம்பி எம்பீ என இகர ஈற்று விரவுப் பெயர்கள் ஈகாரமாய்த் திரிந்தன. |