ஆண்வாழி, பெண்வாழி, சாத்தன்வாழி, மகள்வாழி ‘தூங்கல்வாழி, தாய்வாழி என ஒற்று ஈற்று விரவுப் பெயர்கள் அண்மைக்கண் இயல்பாயின. ஆண் ஆணே, பெண் பெண்ணே, மகன் மகனே, மருமகன் மருமகனே, மகள் மகளே, மருமகள், மருமகளே தூங்கல் தூங்கலே, கூந்தல் கூந்தலே, தாய் தாயே என ஒற்று ஈற்று விரவுப் பெயர்கள் பிறிது வந்து அடைதலாய் ஏகாரம் மிக்கன. |
ஒற்று ஈற்று அஃறிணைப் பெயரும் உயிர்ஈற்று அஃறிணைப் பெயரும் அண்மைக்கண் இயல்பாயின. இதன்-இதனே, புனம்-புனமே, மான்-மானே, வேய்- வேயே, கார்- காரே, குயில்-குயிலே, புள்- புள்ளே எனவும், விள-விளவே, நிலா-நிலாவே, கிளி-கிளியே, வீ-வீயே, குருந்து-குருந்தே, பூ-பூவே, சே-சேவே, கழை-கழையே எனவும் ஒற்று ஈற்று அஃறிணைப் பெயர்களும் உயிர் ஈற்று அஃறிணைப் பெயர்களும் பிறிது வந்து அடைதலாய் ஏகாரம் மிக்கன. மந்தி- மந்தீ, தும்பி- தும்பீ என இகர ஈற்று அஃறிணைப் பெயர்களின் ஈறு ஈகாரமாய்த் திரிந்தன. பிறவும் அன்ன. ‘மன்’ என்ற மிகையானே ஐகார ஈற்று உயர்திணைப் பெயர் பிறிது வந்து அடைதலாய் ஏகாரம் ஏலாதனவும், அஃறிணைப் பெயர் அன்மொழித்தொகையாய்த்தான், ஆகு பெயராய்த்தான், உயர்திணைக்கண் வந்தவழி உயர்திணைப் பெயராய், |