| என இகரஈறு ஈகாரமாய்த் திரிந்தும், தாழ்குழல், தாழ் குழலே எனப் பிறிது வந்து அடைதலாய் ஏகாரம் மிக்கு விளி ஏற்றலும், தொழீஇஇஇஇ-தொழீஇஇஇஇஇ-எனத் தொழில் செய்கின்றவளே என்னும் பொருட்டாய் நிற்பது ஓர் இகர ஈற்று அளபெடைப் பெயரும், உழாஅஅன்- கிழாஅஅன்- என னகர ஈற்று அளபெடைப் பெயரும், கோஒஒள- என ளகர ஈற்று அளபெடைப் பெயரும், சிறா அஅர்-மகாஅஅர்-என ரகர ஈற்று அளபெடைப் பெயரும் மாஅஅல்-என லகர ஈற்று அளபெடைப் பெயரும் இயல்பாய் விளி ஏற்றலும், நம்முன்- நம்முனா என உன்ஈறு ஆகாரம் மிகுதலும், அம்ம சாத்தா என்புழிச் சாத்தா என்பதே எதிர்முகம் ஆக்கும் ஆயினும் அம்ம என்னும் இடைச்சொல்லும் எதிர்முகம் ஆக்குதலே குறித்து நிற்றலின் அதுவும் அம்மா சாத்தா என இறுதி திரிந்து விளி ஏற்றலும், இவ்வாறு வருவன பிறவும் கொள்க. இவ்வளபெடைப் பெயர்கள் செய்யுளுள் குறைந்து வந்தன சந்த இன்பம் நோக்கி விகாரத்தான் வந்தன என்க. 49 |
மூவகைப்பெயர்- உயர்திணைப்பெயர், விரவுப் பெயர், அஃறிணைப்பெயர் என்பன. மேல் என்றது 206ஆம் நூற்பாவினை. முறைமை சுட்டா மகன் உயர்திணைச் சொல்(தொல்.சொல். 163); முறைமை சுட்டும் மகன் முறைப்பெயராகிய விரவுத்திணைச்சொல். முறைமை சுட்டா மகள் உயர்திணைச் சொல் (தொல்.சொல். 163); முறைமை சுட்டும் மகள் முன் |