பெயராகிய விரவுத்திணைச்சொல். ஆண்பால் பெண்பால் என்பன பொதுவாகக் கூறப்பட்டவழி உயர்திணைச் சொற்களாம். இவற்றை அஃறிணைச் சொற்களாக்க வேண்டின் ஆண் பெண் என்பன அடைகளாக ஆண்மான் பெண்மான் என்றாற்போல அடைகொளிகளாகப் பிறசொற்கள் வருதல் வேண்டும். ‘பெண்ணும் ஆணும் பிள்ளையும் அவையே’ (தொல்.பொருள். 624) என்ற நூற்பாவிற்குப் பேராசிரியர் உரைத்த உரையான் இஃது உணரப்படும். ஆய் என்ற சொல் சங்ககால வள்ளல்களுள் ஒருவனாகிய ஆய் அண்டிரனைக் குறிப்பதாம். ஆய் என்பது தாய் என்னும் பொருளது ஆயின் விரவுத்திணைச் சொல்லாய் முறைப் பெயராம் என்பது அறிக. யார் ஆர்’ என்று ஆவது போல, யாய் ஆய் என்று ஆவது பிற்கால மரபு. |