உரையாசிரியர்- ‘மக்கட் சுட்டே என்பது மக்கள் என்று வரைந்து சுட்டுதற்குக் காரணமாகிய தன்மை என்னும் ஒருவன். இனி, மக்கள் எனினும் சுட்டு எனினும் அவரையே சொல்லியவாறு என்பர் ஒரு திறத்தார் சுட்டு என்பது கருத்து. அக்கருதற்பாடு உடைமையின் சுட்டு எனவும்படும் மக்கள் என்பது’. சேனாவரையர்- ‘மக்களாகிய சுட்டு யாதன்கண் நிகழும் அது மக்கட்சுட்டு எனப் பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை; ஈண்டு மக்கள் என்றது மக்கள் என்னும் உணர்வை. எனவே, மக்களே ஆயினும் மக்கள் என்று சுட்டாது பொருள் என்று சுட்டியவழி உயர்திணை எனப்படா என்பதாம்’. நச்சினார்க்கினியர்- ‘மக்கட் சுட்டு என்பது மக்களாகிய சுட்டு என இருபெயரொட்டுப் பண்புத்தொகை. சுட்டு நன்கு மதிப்பு. அஃது ஆகுபெயராய் மக்கட்பொருளை உணர்த்தி நின்றது. சேனாவரையர் இதைப் பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை என்றாராலோ எனின், இருபெயர்ஒட்டு ஆகுபெயர்க்கும் அன்மொழித் தொகைக்கும் வேறுபாடு உணராமல் கூறினமையின் அது பொருந்தாது; என்னை வேறுபாடெனின், ஈண்டு ஆகுபெயராய்நின்ற நன்கு மதிக்கப்படும் பொருளும் மக்களையே உணர்த்தி நிற்கும்; அன்மொழித்தொகை அவ்வாறு அன்றி, வெள்ளாடை என்றால் வெண்மையும் ஆடையும் அன்றி உடுத்தாளையே உணர்த்தி நிற்கும்; இது தம்முள் வேற்றுமை. தெய்வச்சிலையார் - மக்கள் என்னாது சுட்டு என்றது என்னைஎனின், மக்களாவார் ஒரு நீர்மையான் அன்றி ஆணும் பெண்ணும் அலியும் ஆகிய வடிவுவேற்றுமை உடையராகலின் அவர்எல்லார்மாட்டும் பொதுவாகக்கிடக் |