சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

216 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

இது ளகர ஈற்று உயர்திணைப் பெயர்கட்கு எய்தியதன் மேல் சிறப்பு விதி கூறுகின்றது.

இ-ள்: ளகர ஈற்று உயர்திணைப் பெயருள் சில
 

  ‘மேவார்த் தொலைத்த விறல்மிகு வேஎள்’  
எனச் சேய்மைக்கண் அளபு எடுத்தலும்,

சில-குழையள் குழையாள்- அணியன் அணியாள்- மக்கள் மக்காள்- என அள் ஈற்று அயல் நீடலும், சில

குழையாள் குழையாய்- உண்டாள் உண்டாய்- என ஆள் ஈற்று இறுதி ளகரம் யகர ஒற்றாய்த் திரிதலும்,
 

  சில- ‘தலைமீது கொள்வம் அடிகேள்’  
என ஈற்று அயலில் அகரம் ஏகாரம் ஆதலும் விளிஉருபாம் என்றவாறு.

பிறவும் அன்ன.

  ‘துறந்து உள்ளார் அவர்எனத்துனிகொள்ளல் எல்லாநீ’.

 கலி.35

என ஈறு அழிந்தும் விளியேற்கும் என்பாரும் உளராலோ எனின், அது படர்க்கைப்
பெயர் ஆகாது தோழி முன்னிலைப் பெயராயே தோழீ என்னும் பொருட்டாய் நிற்பது ஒன்றாகலின் ஈண்டைக்கு ஏலாது என்க.
 

விளக்கம்
 

எய்தியது- 207 ஆம் நூற்பாவில் சொல்லப்பட்ட செய்தி.

இந்நூற்பா ளகர ஈற்று உயர்திணைப் பெயருக்கே உரியது. ஆகவே ளகர ஈற்று அஃறிணைப் பெயருக்கும் பொதுப் பெயர்க்கும் விளியேற்கும் செய்தி பற்றிய விதி 214 ஆம் நூற்பாவாக உள்ளது.

ளகர ஈறு என்று பொதுப்படக் கூறவே, அள்ஈறும் ஆள்ஈறும் அடங்கின. சிறுபான்மை வேஎள் முதலிய ஏனைய ஈறுகளும் கொள்க.