சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

218 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

  ‘ஆள்என் இறுதிப் பண்புப் பெயரும்
வினைப்பெயர்க் கிளவியும் ஆயொடு விளிக்கும்.’

127

  ‘அளபெடைப் பெயரே அளபெடை இயல.’

130

 

ரகர ஈற்றுச் சிறப்புவிதி
 

211. ர-ஈற்று உயர்பெயர்க்கு அளபுஎழல் ஈற்றுஅயல்
அகரம் இஈ ஆதல் ஆண்டைஆ
ஈஆதல் அதனோடு ஏ-உறல் ஈற்று ஏ
மிக்கு அயல் யா-கெட்டு அதன்அயல் நீடல்
ஈற்றின் ஓஉறல் இவையும் ஈண்டு உருபே.
 

இது ரகர ஈற்று உயர்திணைப்பெயர்கட்கு எய்தியதன் மேல் சிறப்புவிதி
கூறுகின்றது.

இ-ள்: ரகர ஈற்று உயர்திணைப்பெயருள் சில, உறாஅர் - செறார் செறாஅர்- எனச் சேய்மைக்கண் அளபு எடுத்தலும், சில,

  தெவ்வர் ‘என்னைமுன் நில்லன்மின் தெவ்விர்’

 குறள். 771

என ஈற்றுஅயல் அகரம் இகரம் ஆதலும்,

சில வேந்தர் வேந்தீர் - நாய்கர் நாய்கீர் என அஃது ஈகாரம் ஆதலும்,

சில பார்ப்பார் பார்ப்பீர் - சான்றார் சான்றீர் - கரியார் - கரியீர்- என ஈற்று
அயல் ஆகாரம் ஈகாரம் ஆதலும்
 

  சில, பல்சான்றார் ‘பல்சான்றீரே’

புறம்.195

  சீவக சாமியார் ‘சீவக சாமியீரே’

சீவக.193

 என அதனுடனே ஏகாரம் மிகுதலும்,

சில, தோழியார் தோழீரே, தொழும்பியார் தொழும்பீரே என் ஈற்று அயல் யா-கெட்டு அதன் அயல் இகரம் ஈகாரமாய் ஏகாரம் மிகுதலும்,