சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

பெயரியல்-நூற்பா-53219

சில, பெண்டிர் பெண்டிரோ என இர்ஈறு புலம்பின்கண் ஓகாரம் மிகுதலும் ஆகிய இவையும் விளி உருபாம் என்றவாறு.

‘ஈண்டு’ என்ற மிகையானே, கடல்-கழி- சாத்தி- கொற்றி என்றல் தொடக்கத்து
ஒரு சாரனவற்றைக் கடலார்- கழியார்- சாத்தியார்- கொற்றியார்- எனச் சிறப்பித்து
உயர்திணை வாய்பாட்டான் வழங்குழி, அவையும் கடலீரே- கழியீரே- சாத்திரே-
கொற்றீரே என்றல் தொடக்கத்துத் திரிபு ஏற்றலும், பிறவாற்றான் வரும் திரிபு
வேறுபாடுகளும் கொள்க.


விளக்கம்
 

எய்தியது- 207ஆம் நூற்பாச் செய்தி.

ரகர ஈறு எனவே அர் ஈறும் ஆர் ஈறும் இர் ஈறும் அடங்கின. தெவ்வர், வேந்தர், நாய்கர் என்பன அர் ஈற்றுப் பெயர்கள். உறார், செறார், பார்ப்பார், சான்றார், கரியார். பல் சான்றார், சீவக சாமியார், தோழியார், தொழும்பியார் என்பன ஆர் ஈற்றுப் பெயர்கள். பெண்டிர் என்பது இர் ஈற்றுப் பெயர்.

சீவக சாமியார், சீவகசாமியீரே என்று விளியேற்றலைப்

  ‘பண்புகொள் பெயரும் அதனோ ரற்றே’

தொல் சொல். 141

என்பதன் கண்ணும், பெண்டிர் பெண்டிரோ என விளியேற்றலை,
 
  ‘ஏனைப் புள்ளி ஈறுவிளி கொள்ளா’்

தொல்.சொல். 131

என்பதன் கண்ணும் நச்சினார்க்கினியர் அடக்கினார்.


ஒத்த நூற்பாக்கள்
 

 

‘ஆரும் அருவும் ஈரொடு சிவணும்.’

தொல்.சொல். 138

 

‘தொழிற்பெயர் ஆயின் ஏகாரம் வருதலும்
வழுக்கின்று என்மனார் வயங்கி யோரே’.

தொல்.சொல். 139