| ‘பண்புகொள் பெயரும் அதனோ ரற்றே.’ | 140 |
| ‘அளபெடைப் பெயரே அளபெடை இயல.’ | 141 |
| ‘ஈர் ஆகும் அர் ஆர் இதன் மேலும் ஏகாரம் ஓரோ விடத்துளதாம் ஓங்களபாம்- பேர்கள் இயல்பாம்.’ | நே.சொல்.27 |
| முழுதும் | நன்.309, தொ.வி.74 |
| ‘ஆரும் அருவும் ஈரொடு சிவணும். | மு.வீ.பெ.119 |
| ‘தொழிற் பெயர்க்கிளவி ஏயொடு சிவணும்.’ | 120 |
| ‘பண்புகொள் பெயரும் அவ்வியல்பு ஆகும்.’ | 121 |
| ‘அளபெடைப் பெயரே அளபெடை இயல.’ | 122 |
லகர யகர ஈற்றுச் சிறப்புவிதி
|
212. | லகார ஈற்று ‘உயர்பெயர்க்கு அயல்நீ டுதலும் யகார ஈற்றிற்கு அளபும் ஆகும். | |
இது லகர யகர ஈற்று உயர்திணைப் பெயர்கட்கு எய்தியதன்மேல் சிறப்புவிதி கூறுகின்றது. இ-ள்: லகர யகர ஈற்று உயர்திணைப் பெயர்களும் சில முறையானே ஏந்தல் ஏந்தால்- தோன்றல் தோன்றால்- குரிசில் குரிசீல்- என லகர ஈறு ஈற்று அயல் நீடலும், |
| விளங்குமணிக் கொடும்பூண் ஆஅய் நின்நாட்டு இளம்பிடி ஒருசூல் பத்துஈ னும்மோ | புறம்- 130 |
என யகரஈறு சேய்மைக்கண் அளபு எடுத்தலும் விளி உருபாம் என்றவாறு. பிறவும் அன்ன. |
விளக்கம்
|
எய்தியது- 207 ஆம் நூற்பாவிதி. யகர ஈறு இயல்பாதலை நச்சினார்க்கினியர், |
| ஏனைப் புள்ளி ஈறுவிளி கொள்ளா. | தொல்.சொல்.131 |
என்ற நூற்பா உரையில் குறிப்பிட்டார். சேனாவரையரும் தம் 129 ஆம் நூற்பா உரையில் குறிப்பிட்டுள்ளார். |