இகலா, அலவா, கலுழா, சாத்தா, கொற்றா- என்பன இறுதி அழிவதனொடு ஈற்றயல் நீண்டன. |
| ‘அன்என் இறுதி ஆவா கும்மே’ | தொல்.சொல். 130 |
| ‘அண்மைச் சொல்லிற்கு அகரம் ஆகும்.’ | தொல்.சொல். 131 |
என்று தொல்காப்பியனார் உயர்திணைக்கு ஓதியதை வழக்குப் பயிற்சி நோக்கி இவர் ஏனையவற்றிற்கும் கொண்டார். |
ஒத்த நூற்பாக்கள்: |
| ‘அன்இறுதி ஆஆகும் அண்மைக்கு அகரமாம்.’ | நே.சொல்.26 |
| முழுதும் | நன். 311, தொ.வி.76 |
லளஈற்று அஃறிணைப்பெயர் பொதுப்பெயர் விளியேற்றல்
|
214. | லள ஈற்ற அஃறிணைப் பெயர்பொதுப் பெயர்க்கண் ஈற்று அயல் நீட்சியும் உருபுஆ கும்மே. | |
இது லகர ளகர ஈற்று அஃறிணைப் பெயர்க்கும் விரவுப் பெயர்க்கும் எய்தியதன்மேல் சிறப்புவிதி கூறுகின்றது. இ-ள்: லகர ளகர ஈற்று அஃறிணைப் பெயருள்ளும் விரவுப் பெயருள்ளும், சில |
| முயல்- ‘திங்களுள் தோன்றி இருந்த குறுமுயால்’ | கலி. 144 |
கிளிகள் கிளிகாள் எனவும், கூந்தல் கூந்தால், மக்கள் மக்காள் எனவும், ஈற்று அயல் நீடலும் விளி உருபும் என்றவாறு. 56 பிறவும் அன்ன. |
விளக்கம் |
எய்தியது- 212 ஆம்நூற்பாச்செய்தி. தொல்காப்பியச் சொற்படல விரவுப்பெயர் (150) அஃறிணைப்பெயர் (151) நூற்பாக்களில் சேனாவரையர் உரையில் கூந்தால், மக்காள், முயால் என்பன கொள்ளப்பட்டன. |