இது முன்னர்க் கூறிப்போந்த இயல்பு முதலாயின இன்னுழி ஆம் என்கின்றது. இ-ள்: அண்மைக்கண் இயல்பு ஆதலும் ஈறுகெடுதலும், சேய்மைக்கண் அளவு எழுதலும், புலம்பின்கண் ஓகாரம் மிகுதலும் விளிஉருபாம் என்றவாறு. நம்பி நம்பீஇ- சாத்தி சாத்தீஇ- தம்பி தும்பீஇ- என இகரஈறு சேய்மைக்கண் அளபு எழுந்தன. ஒழிந்தவற்றிற்கும் உதாரணம் முன்னர்க் காட்டினவேயாம். |