சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

224 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

  ‘முன்இயல்பாம் ஆனும் அளபெடையும்.’

26

  ‘ஓங்கு அளபாம் பேர்கள் இயல்பாம்’ (ரகரஈறு)

27

  ‘அயல்நெடி தாம் பேரும் அளபெடையாம் பேரும்
இயல்பாம் விளிக்கும் இடத்து.’ (லகர ளகரஈறு)

28

  ‘................கூவுங்கால் சேய்மைக்கு
அளவிறப்ப நீளும் அவை.’

29

  முழுதும்

நன். 313, தொ.வி.78

  ‘அண்மைப் பெயர்இயல் பாகவிளிக்கும்’ (இகரஈறு)

மு.வீ.பெ.107

  ‘அண்மைக் கிளவிக்கு அகரம் ஆகும்.’ (அன்ஈறு).

117

  ‘ஆன்என் இறுதி இயற்கை ஆகும்.’

112

  ‘அயல்நெடி தாயின் இயற்கை ஆகும்.’

126

  “இருதிணை மருங்கினும் எல்லாச் சொற்களும்
சேய்மையின் அளவைக் கடந்துசென்று இசைக்கும்.

134

 

விளியேலாப் பெயர்கள்
 

216. தநநு எஎன் அவைமுதல் ஆகித்
தன்மை குறித்த னளரஎன் இறுதியும்
வினாச்சுட்டு எனும் அவை முதல் ஆகி
ஐம்பால் குறித்த ஐவகை இறுதியும்
அன்ன பிறவும் தாமும் தானும்
இன்மை வேண்டும் விளியொடு கொளலே.
 
 

இது மேல் விளி ஏற்கும் எனக் கூறிப்போந்த இறுதியவற்றுள்ளும் இவ்வீற்றுப் பெயர்கள் விளிஏலா என்கின்றது.

இ-ள்: தநநு என்னும் உயிர் மெய்யையும் எ என்னும் உயிரையும் முதலாக உடையவாய் ஒருவனது கிளைப்பொருண்மையைக் குறத்து நின்ற னளர என்னும் மூவகைப் புள்ளியையும் இறுதியாக உடைய பெயர்களும், வினா எழுத்துக்களையும்