சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

226 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

  தமன் முதல் எம்மார் இறுதியாக உள்ளன கிளைப்பெயர்கள்.
எவன் முதல் யாவை இறுதியாக உள்ளன வினைப்பெயர்கள்.
அவன் முதல் உவை இறுதியாக உள்ளன சுட்டுப்பெயர்கள்.
தநநு எ-என அவைமுத லாகிய'
 

தொல்.சொல்.156

என்ற நூற்பாவுரையுள் நச்சினார்க்கினியர்’ பிறவும் என்ற மிகையால் கொண்ட
மற்றையான் மற்றையாள் மற்றையார்- பிறன் பிறள் பிறர் என்பனவற்றையும்

‘வேண்டும்’ என்பதனாற் கொண்ட
                    எம்பீ- எம்மானே- என்பனவற்றுள் எம்மானே என்பதனையும், தமர் முதலியன
கள்ளீற்றொடு சிவணித் தமர்காள் நமர்காள் என அயல் நீண்டும் நமரங்காள் எனப்
பெயர்த்திரி சொல்லாயும் விளியேற்கும் என்று சுட்டியவற்றையும் இவ்வாசிரியர்
கொண்டுள்ளார்.
 

சூறாவளி
 

‘இ உ ஊவோடு’ என்னும் சூத்திரத்தான் விளியேற்கும் எனக் கூறிப்போந்த
ஈற்றுள் ஒன்று அல்லாத மகரஈற்றுத் தாம் என்னும் விரவுப்பெயரையும் ஈண்டு எடுத்து
விலக்கினார். அவருக்கு மயக்கமும் மறவியும் இயல்பு என்றற்கு அதுவே சான்றாதல்
அறிக.
 

அமைதி
 

‘இ உ ஊவோடு’ என்னும் நூற்பாவில் ‘ஒல்வழி அறிதல் வழக்கத் தான’ என்ற
மிகையான் தாம் என்பதனை ஈண்டுக் கொண்டுட்டார். இவ்வாறு முன் நூற்பாவில்
சொல்லப்படாதவற்றைப் பின் நூற்பாவில் கோடல் தொல்காப்பிய உவமவியல்
உவமஉருபு பற்றிய பொதுசிறப்பு நூற்பாக்கள் நோக்கியும் அறிக.