ஒத்த நூற்பாக்கள்: |
| ‘தான்என் பெயரும் சுட்டுமுதல் பெயரும் யான்என் பெயரும் வினாவின் பெயரும் அன்றி அனைத்தும் விளிகோள் இலவே.’ | தொல்.சொல்.137 |
| ‘சுட்டுமுதல் பெயரே முற்கிளந் தன்ன.’ | 142 |
| ‘நும்மின் திரிபெயர் வினாவின் பெயர் என்று அம்முறை இரண்டும் அவற்றியல்பு இயலும்.’ | 143 |
| ‘சுட்டுமுதற் பெயரும் வினாவின் பெயரும் முற்கிளந் தன்ன என்மனார் புலவர்.’ | 148 |
| ‘தநநு எஎன அவைமுத லாகிய தன்மை குறித்த ளரளஎன் இறுதியும் அன்ன பிறவும் பெயர்நிலை வரினே இன்மை வேண்டும் விளியொடு கொளலே.’ | 154 |
| ‘விளியேலா எவ்வீற்றுப் பெயரும்..... .... போற்று.’ | நே.சொல். 57 |
| ‘நுவ்வொடு வினாச்சுட் டுற்ற னளர வைது தாம்தான் இன்னன விளியா.’ | நன். 314 |
| ‘யான்அவன் இவன்உவன் விளிஏ லாவே.’ | மு.வீ.பெ 117 |
| ‘யாவனும் அவ்வியல் பிற்றா கும்மே.’ | 118 |
| ‘அவர் இவர் உவர்விளி அடையா ஆகும்.’ | 123 |
| ‘யாவரும் நீயிரும் அவற்றோ ரற்றே.’ | 124 |
| ‘யாவள் அவள் இவள் உவள்விளி யாவே.’ | 129 |
| ‘தமர்நுமர் தமன்நுமன் தமள்நு மள்விளி ஏலா நமர் நமள் என்பதும் அற்றே.’ | 135 |
இருவகை மயக்கம்
|
217. | பொருள் மயங் குதலும் உருபுமயங் குதலும் தெரிநிலை உடைய வேற்றுமைக் கண்ணே. | |
இது மேற்கூறிப் போந்த வேற்றுமைகட்கு எய்தாதது எய்துவிக்கின்றது. |