இ-ள் பொருள் மயங்குதலும் உருபு மயங்குதலும் ஆகிய இருகூற்று மயக்கமும் ஆராய்ந்து அறியும் இயல்புடைய வேற்றுமை இடத்து என்றவாறு. |
ஒத்த நூற்பாக்கள்: |
| ‘வேற்றுமை ஒன்றன் உரிமைக்கண் வேறொன்று தோற்றல்.................ஏற்ற பொருள், மாறினும்தான் நிற்றல்.............., தேறவரும் மெய்ந்நூல் தெளிவு.’ | நே.சொல். 12 |
பொருள் மயக்கம்
|
218. | பொருளின் மயக்கம் பிறிது ஒன்றன் பொருளொடு தன் பொருள் விடாது தலைமயங் குதலே. | |
இது பொருள் மயக்கம் ஆமாறு கூறுகின்றது. இ-ள்: அவ்விரு கூற்று மயக்கத்துள் பொருளின் மயக்கம் ஆவது பிறிது ஒரு வேற்றுமை உருபின் பொருளொடு பிறிது ஒரு வேற்றுமை உருபு தன் பொருளில் தீராது அப்பொருள் நிலைக்களத்துச் சென்று மயங்குதலாம் என்றவாறு. |
விளக்கம் |
தன் பொருளில் தீராது பிறிது ஒன்றன் பொருட்கண் சேறல் பொருள் மயக்கம். தொல்.சொல். 84 சேனா. உரை. |
உருபு மயக்கம் |
219. | உருபின் மயக்கம்ஓர் உருபின் பொருளொடு தன்பொருள் விடுத்துத் தலைமயங் குதலே. | |
இஃது உருபு மயக்கம் ஆமாறு கூறுகின்றது. இ-ள்: உருபின் மயக்கமாவது பிறிது ஒரு வேற்றுமை உருபின் பொருளொடு பிறிது ஒரு வேற்றுமை உருபு தன் பொருளின் தீர்ந்து அப்பொருள் நிலைக்களத்துச் சென்று மயங்குதலாம் என்றவாறு. |